ஆர்யா – நயன்தாரா நடிக்கும் ‘ராஜா ராணி’

raja raniஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் , ஏஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ், சண்முகம் இணைந்து தயாரிக்கும் படம் ‘ராஜா ராணி’. அட்லீ இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்குமார் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நசீம், சந்தானம், சத்யன், இவர்களுடன் சத்யராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு சராசரி கணவன் , மனைவி இடையே இருக்கும்  ஊடலையும் , கூடலையும் சொல்லும் படம். வித்தியாசமான பின்னணி, காதல், இசை இவற்றுடன் முற்றிலும் மாறுபட்ட படைப்பாக உருவாகிறது இப்படம்.

‘ஆர்யா – நயன்தாரா இருவருக்கும் திருமணம்’ என விளம்பரப்படுத்தியதைப் போல இன்னும் நிறைய ‘ஷாக்’ கொடுக்கும் விளம்பரங்களை வைத்திருக்கிறார்களாம் படக் குழுவினர்.

ஏன் ? , அடுத்து  ‘ஆர்யா – நயன்தாரா பிரிந்தனர் ’ என வேற ஏதாவது ஏடா கூடமா சொல்லப் போறீங்களா….

Read Previous

‘மகாசேன்’ புயல் திசை மாறியது…

Read Next

Musee Musical launches an exclusive Piano Salon in Chennai