‘வந்தே மாதரம்’ இசை ஆல்பம் புகழ் பரத்பாலா தமிழில் முதன் முறையாக இயக்கும் ‘மரியான்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
பத்திரிகையாளர் சந்திப்பு என்று சொல்லிவிட்டு பத்திரிகையாளர்களை அதிகமாகக் கேள்வி கேட்க விடாமல், இயக்குனர் பரத் பாலா எழுதிக் கொடுத்த கேள்விகளை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினியே கேட்க பத்திரிகையாளர்களின் முணுமுணுப்புக்களுடனேயே நிகழ்ச்சி முடிவுற்றது.
இருந்தாலும், அதிலிருந்து நாம் தொகுத்த சிலரின் பேச்சுக்கள்…..
மரியான்’ படத்தின் மிகப் பெரிய ஹைலைட்டே ஏ.ஆர். ரகுமான் தான். ஏற்கெனவே பாடல்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க, வழக்கம் போல் இயல்பாகவே பேசினார் ரகுமான்.
“பரத்பாலா கூட படம் பண்றது ஒரு எக்ஸ்கர்ஷன் போற மாதிரி. எதை எடுத்தாலும் இன்னும் நல்லா பண்ணணும்னு நினைக்கிறவரு. 25 வருஷத்துக்கு முன்னாடியே அவர் எடுத்த விளம்பரப் படங்கள் வேற ஒரு ரேன்ஞ்ச்ல இருக்கும்.
பரத் பாலா கூட படம் பண்ணணும்னு ஒரு கன்டிஷன் இருக்கு. அவர் படம் இயக்கும் போது நான்தான மியூசிக் பண்ணணும்னு.
இசையமைக்கும் போது இந்த படத்தை முதல்ல பார்த்ததுக்கும், அப்புறம் போகப் போக பார்க்கிறதுக்கு ரொம்ப ‘டைட்டா’ இருக்கு.
செல்வராகவன், தனுஷ், யுவன் மூணு பேரும் நிறைய ஒர்க் பண்ணியிருக்காங்க. அதுல ஒரு ரேப்போ இருக்கும். அவங்க பாடல்களையெல்லாம் நான் பார்த்திருககேன். அதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கும்.
‘கடல் ராசா’ பாட்டுக்காக என்னோட டிராக் ஒன்னு இருந்தது. நான் பார்க்கும் போதெல்லாம் அது ஒட்டாமலே இருந்தது. அந்த பாட்டுக்கு யுவன் பாடினால் நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணோம். வந்து ஒரு மணி நேரத்துல பாடி முடிச்சிட்டு போயிட்டாரு’’, என்றார்.
இயக்குனர் பரத் பாலா பேசுகையில் ,“ வந்தே மாதரம்’ ஆல்பம் பண்ணும் போது இந்தியா முழுக்க 1,50,000 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டியிருந்துச்சி. அதிகமான கிராமங்களுக்கும் போனேன். கிராமத்து மக்களைப் பார்க்கும் போது அவங்கள வச்சி கதை சொல்லணும்னு ஆசைப்பட்டேன். இந்த கதை எழுதும் போது கிராமத்துல ஒரு மீனவக் கிராமத்துல அமையற மாதிரி வந்தது. அதான், இப்ப இந்த ‘மரியான்’ படமா வந்திருக்கு,” என்றார்.
தனுஷ் பேசுகையில், “ இன்னொரு முறை இதை மாதிரி கதை வந்தால் நடிக்கக் கூடாது..ரொம்ப கஷ்டமா இருந்தது. இனி கதை கேக்கும் போதே, சுவிட்சர்லாந்துல ஷுட்டிங் இருக்கான்னு கேக்கணும். சும்மா..ஜாலிக்காக சொன்னங்க…பரத் பாலா சார் கூட ஒர்க் பண்ண ரொம்ப கஷ்டப்பட்டேன். ஆனால் இப்ப படம் பார்த்த பிறகு அதெல்லாம் போயிடுச்சி. ரகுமான் சார் மியூசிக்ல நடிச்சது ரொம்ப சந்தோஷம். அவர் இசையில் நானும் ஒரு பாட்டு எழுதறது இன்னும் சந்தோஷம்,” என்றார்.
நாயகி பார்வதி பேசுகையில், “பூ’ படம் பார்த்த பிறகு இந்த படத்தோட பனிமலர் கேரக்டருக்கு நான் பொருத்தமா இருப்பன்னு நினைச்சி என்னை தேர்ந்தெடுத்தாங்க. இந்த படத்தோட டிரைலர் பார்க்கிறவங்க என்னை பார்க்கிற மாதிரியே இல்லை, பனிமலரை பார்க்கிற மாதிரியேதான் இருக்குன்னு சொன்னாங்க. இந்த மாதிரி ஒரு கதையில நடிச்சது எனக்கு ரொம்ப பெருமை, ” என்றார்.
நிறைய ‘கடல்’ படங்களை பார்த்து நாங்க ரொம்பவே சோதனைக்குள்ளாகியிருக்கோம். நீங்களாவது நல்ல படத்தைக் கொடுங்க ‘ராசா’க்களா…..
