முன்னணி நடிகையான லட்சுமி மேனன்…

lakshmi-menonஇந்த செய்தியும் ஒரு கேரளத்து நடிகையில் செய்திதான். ‘சுந்தரபாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ‘சுந்தர’ நடிகை லட்சுமி மேனன்.

‘கும்கி’ படத்தில் அறிமுகமானாலும் சசிகுமாருடன் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படம்தான் முதலில் வெளிவந்தது. அடுத்து மீண்டும் சசிகுமாருடன் இணைந்து ‘குட்டிப் புலி’ படத்தில் நடித்தார். இந்த படம் வரும் 30ம் தேதி வெளிவருகிறது. ‘குட்டிப் புலி’யில் நடித்ததாலோ என்னவோ இப்போது திடீரென தமிழ் சினிமாவில் ஒரு ‘புலி’ ஆக பாய்ந்து வருகிறார்.

தற்போது அதிக தமிழ்ப் படங்களில் நடிக்கும் ஒரு நடிகையாக மாறிவிட்டார் லட்சுமி மேனன்.

விமல் நடிக்கும் ‘மஞ்சப் பை’, கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘சிப்பாய்’,  விஷால் நடிக்கும் ‘பாண்டிய நாடு’, சித்தார்த் நடிக்கும் ‘பீட்சா’ இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படம், ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

‘பத்தாவது’ பரீட்சை எழுதியுள்ளவர் இப்போது தேதி ‘பத்தாமல்’ பிஸியாக நடித்து வருகிறார்….

Read Previous

‘கேரளத்துப் பைங்கிளி’ நஸ்ரியா நசீம்…

Read Next

2014 – 15ல் + 1, +2 புதிய பாடத்திட்டம்