தமிழில் அறிமுகமான புதிதில் தோல்விப் படங்களில் நடித்து வந்த தமன்னா பின்னர் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் ஆனார்.
தமன்னாவின் தொழில் பக்தியையும், நேரத்தை மிச்சப்படுத்துவதைப் பற்றியும் ரொம்பவே தாராளமாகப் பேசுகின்றனர் திரையுலகினர்.
பொதுவாக , ஷுட்டிங் நடக்கும் சமயம், காட்சிகள் இல்லாத போது ஹீரோக்களும், ஹீரோயின்களும் ஓய்வெடுக்க ‘கேரவன்’ வண்டிக்குள் சென்று விடுவதுண்டு. ஹீரோயின்கள், சில சமயங்களில் கிளாமராக உடையணிந்திருக்கும் போது, காமிரா முன் நிற்காத போது, அந்த கிளாமர் உடையை மறைப்பதற்காக கோட், ஷால் போன்றவற்றை அணிந்து கொள்வர்.
மீண்டும் ஷுட்டிங்குக்கு அழைக்கும் போது, மீண்டும் மேக்கப் போடுவதற்காகவும், மறைப்பதற்காக மேல் அணிந்த உடைகளை களைவதற்கும் நேரம் எடுத்துக் கொள்வதுண்டு.
ஆனால், தமன்னா அப்படிப்பட்ட சூழ்நிலை வந்தால், எந்த எக்ஸ்டிரா ஆடையாலும் கிளாமரான உடையை மறைக்காமல் அப்படியே வலம் வருவாராம். இதற்காக நேரத்தை வீணடிக்காமல் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஒத்துழைப்பு கொடுப்பாராம்.
தமன்னா முன்னணி நடிகையானதன் காரணம் இப்போது புரிகிறதா….