வசந்த பாலன் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் படம் ‘காவியத் தலைவன்’.
இந்த படத்தில் சித்தார்த், பிருத்விராஜ், அனைகா மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.
‘அரவான்’ படத்திற்குப் பிறகு வசந்தபாலன் இயக்கும் படம் இது. இந்த படத்தின் கதை 1920களில் நடக்கும் கதையாக உருவாக இருக்கிறது.
சித்தார்த் பாடகராகவும், அனைகா இளரவசியாகவும் நடிக்கிறார்களாம். அன்றைய பிரபல பின்னணி பாடர்களான எஸ்.ஜி. கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் இஸ்பிரேஷன்தான் இந்த கதையாம்.
இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகிறது.