‘தலைவன்’ இசை வெளியீடு

Thalaivan movie audio launch -2புளூ ஓசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் சித்திரைச்செல்வன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘தலைவன்’.

திரைப்பட கல்லூரி மாணவர் ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப் படத்தில், புதுமுகம் பாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிகிஷா படேல் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் சந்தானம், கோவைசரளா, சந்தானபாரதி, பாண்டு, சுமன்ஷெட்டி, மனோபாலா, வின்சென்ட் அசோகன், முத்துக்காளை, அபிஷேக், ஓ.ஏ.கே.சுந்தர், டி.பி.கஜேந்திரன், ரவிராஜ். வாசுவிக்ரம், சுவாமிநாதன், கணேஷ், ஆர்த்தி, ரவி, ஜெயபிரகாஷ், மீராகிருஷ்ணன், மோனிகா, கூல் சுரேஷ், அந்தோணிராஜ், கிரி, வி.டி.வி.கணேஷ், மூணார் ராஜேஷ், ஸ்வேதா, பவர் ஸ்டார், சுமன், ஷோபா, கோட்டா சீனிவாசராவ், சுப்புராஜ், சுரேஷ்கிருஷ்ணன், வஞ்சிநாதன், மதியழகன், ராயபுரம் ரவி, யுவராணி உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஜேசுதாஸ், உதித் நாராயணன், கார்த்திக், ரஞ்சித் என்று முன்னணி பாடகர்களை பட வைத்து இசையமைத்திருக்கிறார் வித்யாசாகர். பாடல்கள் அனைத்தும் தாரத்தோடும், ரசிகர்களின் உள்ளத்தை தொடுகிற மாதிரியும் கவிஞர் அறிவுமதி, யுக பாரதி, விவேகா, மதன் கார்க்கி ஆகியோர் எழுதி உள்ளானர்.

இந்த படத்தின் பாடல் இசை வெளியீட்டு விழா நேற்று (27.05.2013) திங்கள் மாலை 5.00 மணிக்கு சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

விழாவுக்கு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் அமீர் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் சங்க பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் தயாரிப்பாளர் கில்டு தலைவர் ஹெம்நாத் பாபுஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

படத்திற்கு உழைத்த டெக்னீஷியன்களும், தொழிலாளர்களும் பாடல் சிடியை வெளியிட பூந்தமல்லி அசோக், பண்ருட்டி பாபு, ஞானி, சரவணன் ஆகியோர் ரசிகர்கள் சார்பில் பெற்றுக்கொண்டனர்.

விழாவில் படத்தின் நாயகன் பாஸ் பேசுகையில், “என் மீது அன்பும் ஆதரவும் வைத்து எனது முதல்படத்திலேயே என்னை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்த, என் உடலிலும் உயிரிலும் கலந்துவிட்ட என் அன்பு ரசிகர்களே, இந்தப்படத்தை சித்திரைச்செல்வன் சாரும் ரமேஷ்செல்வன் சாரும் பெரிய அளவில எடுத்திருக்காங்க. அதை விட பெரிசா இந்தப்படம் வெற்றி பெறப்போகுது. அதுக்கு காரணமாக இருக்கப்போறதும் என்னுடைய ரசிகர்களாகிய நீங்கள் தான்.

இந்தப்படத்தின் இன்றைய விழா நாயகன் வித்யாசாகர் சார் தான். அழகா அஞ்சு பாட்டு தந்திருக்கார்.  ரமேஷ் சார் கிட்டயும் சித்திரை சார்கிட்டயும் படத்தோட இசையை தொழிலாளர்களை வைத்து வெளியிடலாமா என்று உடனே சரி என்று சம்மதித்தார்கள். ஏன்னா, வெயில் மழை பாராமல் இரவு பகலா தொழிலாளர்களின் உழைப்பில தான் ஒரு சினிமா உருவாகுது, அவங்களை கௌரவிக்கணும், அவங்களை மேடை ஏததணும். அவங்கதான் அஸ்திவாரம். அவங்க முன்னாடி தான் இந்த இசைவெளியீடு நடக்கணும், அவங்க ஒருபக்கம்னா இன்னொரு பக்கம் இந்த படத்தை பெரிய அளவுல கொண்டு போய் சேர்த்த என்னுடைய ரசிகர்கள் நீங்க ஒரு பக்கம். உங்களை வச்சித்தான் இந்த விழா நடக்கணும்னு சொன்னேன். அதை அவங்களும் ஒரு மனதோட ஏத்துக்கிட்டாங்க. அதன்படிதான் இந்த விழா இப்படி நடந்துகொண்டிருக்கிறது.

இந்த விழாவில் உங்களுடைய அன்பையும் ஆரவாரத்தையும் பார்க்கும்போது எனக்கு வீட்டுக்கு போகணுமான்னு யோசனையா இருக்கு. இப்டியே இங்கயே உங்களோடயே இருந்திரலாம் போல இருக்கு.

இந்தபடத்தோட பப்ளிசிட்டிக்காக தயாரிப்பாளர் நிறையை செலவழிச்சாரோ இல்லையோ, ரசிகர்கள் நீங்க நிறையவே செலவு செஞ்சி இந்த படத்தை கொண்டு போய் சேர்த்துட்டீங்க.

அரங்கத்திற்குள் நான்  வரும்போது நிறைய ரசிகர்கள் எனக்கு முத்தம்லாம் கொடுத்தீங்க. உடம்பெல்லாம் வலிக்குது, ஆனா அந்த வடுக்களை நான் என்னைக்கும் மறக்கமாட்டேன். ஏன்னா, அது நீங்க அன்பால கொடுத்தது. உங்கள் அன்புக்கு நன்றி. வருகை தந்த அனைவருக்கும் நன்றி,” என்றார் பாஸ்.

கதாநாயகன் பாஸ், நடிகர்கள் பிரசாந்த், அருண் விஜய், சுமன், வின்சென்ட் அசோகன், இயக்குனர் ஆபாவணன் உட்பட பலர் வாழ்த்தி பேசினார் விழாவுக்கு வந்த அனைவரையும் தயாரிப்பாளர் சித்திரைசெல்வன் வரவேற்றனர். முடிவில் இயக்குனர் ரமேஷ் செல்வன் நன்றி கூறினார்.

Read Previous

சறுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்

Read Next

தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜுன் 10ல் திறப்பு