‘காவியத் தலைவன்’ வாலி…

Vaaliகவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காவியத் தலைவன்’ என்ற படத்திற்காக எழுதிய “கோடாலி முடிச்சுப் போட்டு” என்ற பாடல்.

இந்த பாடல் எழுதப்பட்ட சம்பவத்தை இயக்குனர் வசந்த பாலன் முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

“ஜீன் 8ம்தேதி மாலை 6 மணிக்கு  கவிஞர் வாலி அவர்கள் நான் அடுத்து இயக்கப்போகும காவியத்தலைவன் படத்தின் பாடல்கள் வேலைக்காக ஏஆர் ரகுமான் ஸ்டியோவுக்கு  வந்தார். வரும்போதே உடல்நலக்குறைவோடு வந்தார், என்ன சார் உடல் நலம் சரியில்லையா என்று கேட்டேன்.

நேற்று அழகியசிங்கர் புத்தகவெளியீட்டுவிழா நிகழ்ச்சியில் வெகு நீண்ட நேரம் மேடையிலேயே இருக்கவேண்டிய நிர்ப்பந்தமாகி விட்டது. அது உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறினார்.

அப்பறம் எதுக்கு சார் வந்தீங்க இன்னொரு நாள் பார்த்து கொள்ளலாமே என்று கூறினேன்.பரவாயில்ல வர்றேன்னு சொல்லிட்டேன் முடிச்சுட்டு போறேன்னு கூறினார்.

“கோடாலி முடிச்சுப்போட்டு…” என்று துவங்கும் பாடலை ஏஆர்.ரகுமான் அவர்களிடம் பாடி காண்பித்து விட்டு  உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.

அந்த பாடல் தான் அவர் கடைசியாக எழுதிய பாடலாக மாறும் என்று கனவிலும் நினைவிலும என் மனம் எண்ணவில்லை. அய்யா, வாலி அய்யா,எத்தனை அற்புதமான பாடல் வரிகள்  ரகுமான் இசையில் அந்த வரிகளை கேட்கும் போது  ஆகா அற்புதம்.

இறுதி நொடியிலும் அத்தனை நேர்த்தியான  இந்த நூற்றாண்டு படத்திற்கான மொழியை தனக்குள் வைத்திருந்த அற்புதமான கலைஞன், “காவியத்தலைவன் நீ தான் அய்யா ”.

‘காவியத் தலைவன்’ படத்திற்காக அவர் எழுதியதுதான் கடைசி பாடல், என்ன ஒரு பொருத்தம்…

Read Previous

வாலிபக் கவிஞன் வாலி…

Read Next

இன்றைய ரிலீஸ்…‘மரியான்’ மட்டுமே…