இயக்குனர் பேரரசுக்கு தடை…

tihar‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘தர்மபுரி’, ‘பழனி’ , ‘திருவண்ணாமலை’ போன்ற படங்களை இயக்கிய பேரரசு தற்போது மலையாளத்தில் “சன் ஆஃப் அலெக்சாண்டர்” என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தை தமிழில் ‘திகார்’ என்ற பெயரில் வெளியிட இயக்குனர் பேரரசு முடிவெடுத்தார். இது சம்பந்தமான செய்திகளும் அனைத்து மீடியாக்களிலும் வெளிவந்தன.

இந்நிலையில் மலையாளத் திரைப்படத்தின் கதாசிரியரான முகம்மது ஷபீக் கூனுங்கல் என்பவர் , மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்படும் ‘திகார்’ பட வெளியீட்டை எதிர்த்து இயக்குனர் பேரரசு மீதும், தயாரிப்பாளர் மீதும் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்.

இது சம்பந்தமாக அவர் பத்திரிகைகளுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவரது அனுமதியில்லாமலேயே இப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்வதாக அவர் புகார் கூறியிருக்கிறார்.

“திகார்” என்றாலே பிரச்சனைதான் போலும்…

Read Previous

‘பிரியாணி’ செப்டம்பர் 6 ரிலீஸ்…

Read Next

நடிகை மஞ்சுளா விஜயகுமார் மறைவு…