நடிகை மஞ்சுளா விஜயகுமார் மறைவு…

manjula-vijayakumarநடிகை மஞ்சுளா விஜயகுமார் (59) இன்று காலை சென்னையில் காலமானார்.

குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவி இவர்.

இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி மூன்று மகள்களும் திரையுலகில் ஹீரோயின்களாக சில படங்களில் நடித்து,  திருமணமான பின் குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர்கள்.

வீட்டில் கீழே விழுந்ததில் அடிபட்டு, சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் இன்று காலமானார்.

எம்ஜிஆர் நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படத்தில் ஹீரோயினாக 1971ம் ஆண்டு அறிமுகமானார். இப்படத்திற்கு முன் 1969ம் ஆண்டு வெளிவந்த ‘சாந்தி நிலையம்’ படத்தில் சிறுமியாக நடித்தார்.

தொடர்ந்து “இதய வீணை, உலகம் சுற்றும் வாலிபன், பூக்காரி, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன், உத்தமன், அவன் ஒரு சரித்திரம், டாக்டர் சிவா, சங்கர் சலீம் சைமன், குப்பத்து ராஜா, காலம் பதில் சொல்லும்” போன்ற பல படங்களில் நாயகியாக நடித்தவர்.

தமிழ் தவிர, தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரை காதல் மணம் புரிந்து,  திரைப்படங்களில் நடிக்காமல் அமெரிக்காவில் செட்டிலானார். மீண்டும் இந்தியாவிற்கு வந்து குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீப காலமாக திரைப்படங்களிலும் நடிக்காமல் இருந்தார்.

நாளை காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தார் தெரிவித்தனர்.

Read Previous

இயக்குனர் பேரரசுக்கு தடை…

Read Next

தனுஷ் ஹிந்திப் படம் 100 கோடி வசூல்…