கார்த்தி, ஹன்சிகா, பிரேம்ஜி நடிக்க வெங்கட் பிரபு இயக்கி வரும் படம் ‘பிரியாணி’. இப்படம் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் 100வது படம்.
இந்த படத்தில் முதல் முறையாக முன்னணி இளம் இசையமைப்பாளர்களான ஜி.வி. பிரகாஷ்குமார், தமன், இமான், விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடக்க இருக்கிறது.
‘பிரியாணி’ படத்தின் பாடல்கள் அடங்கிய மாஸ்டர் சிடியை யுவன்ஷங்கர் ராஜா இன்று அதிகாலை முறைப்படி தயாரிப்பாளர்களிடம் அளித்து விட்டார்.
இப்படத்தின் இசை மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. காரணம், வெங்கட் பிரபு – யுவன்ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளிவந்த அனைத்துப் படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட்டானவை.
