விஜய், அமலா பால், சத்யராஜ் நடிக்கும் ‘தலைவா’ படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்த படத்திற்கு என்ன சர்டிபிகேட் என தேவையற்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.
இந்நிலையில் இன்று இப்படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டது. இதனால் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 9ம் தேதியன்று படம் வெளியாகிறது.