அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆரம்பம்’ படத்தின் டைட்டில் நீண்ட காலமாக அறிவிக்கப்படாமல் இருந்து திடீரென ஒரு நாள் எந்த டிசைனும் வெளியிடப்படாமல் அறிவிக்கப்பட்டதன் பின்னணி காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த படத்திற்காக ஆரம்பத்திலிருந்தே பல டைட்டில்களை படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் சொல்லி வந்தாராம். ஆனால் ஒன்று கூட அஜித்திற்கு பிடித்த மாதிரி அமையவில்லையாம்.
‘வலை’ என்ற டைட்டில் கூட ஏறக்குறைய முடிவு செய்யப்பட்ட நிலையில் மீடியாக்களில் அந்த டைட்டில் வெளியாகிவிடவே அதையும் வேண்டாம் என்றார்களாம்.
‘ஆரம்பம்’ என்ற டைட்டிலை இயக்குனர் அஜித்திடம் சொன்னதும், அவரும் சம்மதிக்கவே, உடனே அவசர அவசரமாக மீடியாக்களிடம் இப்பெயரை வெளியிட்டு விட்டார்களாம்.
அதனால்தான் ‘ஆரம்பம்’ தலைப்பிற்கான டிசைன் கூட இதுவரை வெளியிடப்படாமலே இருக்கிறது.
ஆனால், அதற்குள் தாங்களாகவே டைட்டிலை வைத்த மாதிரி, பல அஜித் ஆர்வலர்கள் ‘ஆரம்பம்’ படத்திற்கான டிசைனை , டிசைன் செய்து வெளியிட ஆரம்பித்து விட்டார்கள்.
படத்தைப் பார்க்கிறதுக்கு, ரொம்ப காக்க வைக்காதீங்க…சீக்கிரமா ரிலீஸ் பண்ணிடுங்க…