‘ராஜா ராணி’ – செப்.18 டிரைலர் வெளியீடு…

raja rani 1108இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘ராஜா ராணி’. இப்படத்தை அட்லீ இயக்குகிறார். ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீடு வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது.

அட்லீயை இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகப்படுத்துவது பெருமையாக உள்ளது என ஏ.ஆர். முருகதாஸ் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,
“நான் பல முறை ‘ராஜா ராணி’ படத்தைப் பார்த்து  விட்டாலும் ரசிகர்களின் அபிப்ராயத்தை அறிந்துக் கொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறேன். சொன்னக் கதையை அப்படியே படமாக்குவதும் , அதை முறையாக ரசிகர்களை குழப்பும் செய்யாமல் டிரைலரை  உருவாக்குவதும் ஒரு நல்ல இயக்குனரின் அடையாளம் .
அந்த முறையில் அட்லீயின்  திறமை தெளிவாக தெரிகிறது. இவரை அறிமுகப்டுத்துவதிலும் இந்த படத்தை தயாரிப்பதிலும் எனக்கு ரொம்ப பெருமை,” என்கிறார் முருகதாஸ் .

Read Previous

‘555’ – 5 நாள் முன்னாடியே ரிலீஸ்…

Read Next

அஜித்தின் அடுத்த படத் தலைப்பு ‘வீரம்’