அஜித் , ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு ‘வீரம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில்தான் அஜித், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு ‘ஆரம்பம்’ என்ற தலைப்பை அறிவித்திருந்தனர். இப்படத்தின் தலைப்பு வெகு நாட்களுக்குப் பிறகே அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கடுத்து ஆரம்பமான ‘வீரம்’ படத்தின் தலைப்பும் படப்பிடிப்பு ஆரம்பமான ஒரு சில மாதங்கள் கழித்தே அறிவிக்கப்பட்டுள்ளது.
‘வீரம்’ படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பாக பாரதி ரெட்டி தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அஜித் ஜோடியாக தமன்னா நடிக்கிறார்.
சந்தானம், பாலா, விதார்த், முனீஷ், சுஹைல், ரமேஷ்கண்ணா, அப்புக்குட்டி, ‘நாடோடிகள்’ அபிநயா, மனோசித்ரா, சுகுமார் (எதிர்நீச்சல்), இளவரசு, மயில்சாமி, பெரியார்தாசன், தேவதர்ஷினி, வித்யுலேகா, கிரேன் மனோகர், பிரதீப் ராவத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இன்னும் சில நாட்களில் 15ம் தேதியன்று இப்படத்தின் ‘முதல் பார்வை’ வெளியிடப்பட உள்ளது.
இப்படத்திற்காக ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு சண்டை காட்சிக்காக ஓடிஷாவில் உள்ள ராயகடா என்னும் ஊரில் ஏராளமான பொருட்செலவில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.
பொங்கல் அன்று திரைக்கு வருகிறது ‘வீரம்’.