‘கோச்சடையான்’ படம் மிகவும் புதுமையான முறையில் எடுக்கப்பட்டுள்ளதால் மிகவும் ஆரவாரமாகவும், அட்டகாசமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் டிரைலர் வெளியான நாளிலிருந்து இதுவரை 34,26,773 பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
படத்தின் டிரைலருக்கே இந்த அளவு வரவேற்பு இருக்கும் நிலையில் படத்தின் பாடல்களும், படமும் அனைத்து ரசிகர்களையும் கவரும் விதத்தில் இருக்கும் என்கிறார்கள்.
ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது.