பணமில்லை…போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்…

mysskin poster_00001ஒரே  நாளில் இரு படங்கள் வெளிவந்தன. ஒரு படத்தை ஒரு தொலைக்காட்சியின் சார்பு நிறுவனமே எடுத்திருந்தாலும், அனைத்து தொலைக்காட்சிகளிலும், எஃப்எம்-களிலும் விளம்பரப்படுத்தி படத்தை ஓட வைத்து விட்டார்கள்.

ஆனால், அதே நாளில் வெளிவந்த நல்ல படமான ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்கு மேற்கொண்டு விளம்பரப்படுத்த பணமில்லையாம்.

அது மட்டுமல்ல, படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கோயம்புத்தூர் போன மிஷ்கின் ,  அங்கு படத்தின் போஸ்டர் ஒன்று கூட ஒட்டப்படாதது கண்டு அதிர்ச்சியடைந்தாராம்.

எனவே, அன்றிரவே அவரே களத்தில் இறங்கி படத்தின் போஸ்டரை தெருத் தெருவாக ஒட்டினாராம்.

தொடர்ந்து திருச்சியிலும் ஒட்டியிருக்கிறார்.

நல்ல படம் எடுக்கும் இயக்குனர்களை இப்படி நடுத் தெருவுக்கு வரவைப்பது தமிழ் சினிமாவிற்கு அழகல்ல….

Read Previous

ஜி.வி. பிரகாஷ்குமார் நடிக்கும் ‘பென்சில்’

Read Next

தமிழ்ப் படத்தில் நடிக்கும் கிரிக்கெட் வீரர் பிராவோ…