கமிஷனரிடம் புகார் செய்கிறார் நஸ்ரியா….

naiyandi gallery_00006‘நய்யாண்டி’ படத்தில் தனக்குத் தெரியாமல், வேறு ஒரு டூப் நடிகையை நடிக்க வைத்து தன்னை மிகவும் கிளாமராக காட்டியதாக அப்படத்தின் இயக்குனர் சற்குணம் மீது புகார் அளிப்பதற்காக நஸ்ரியா, கமிஷனர் அலுவலகம் செல்லவிருப்பதாக செய்தி வந்துள்ளது.

இந்த விஷயமாக அவர் ஏற்கெனவே நடிகர் சங்கத்திடம் முறையிட்டுள்ளார். பல பத்திரிகைகளிலும் பேட்டி அளித்துள்ளார்.

பொதுவாக திரையுலகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால் சம்பந்தப்பட்ட சங்கங்களில் பேசி முடிவு செய்து கொள்வார்கள்.

இந்த நிலையில் நஸ்ரியா இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு அப்படத்தின் இயக்குனர் , தயாரிப்பாளர் மீது புகார் அளிக்க முடிவு செய்திருப்பது தமிழ்த் திரையுலகத்தில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான் இயக்கிய ‘வாகை சூடவா’ படத்தை சிறந்த படமாக தேசிய விருது வாங்க வைத்தவர் இயக்குனர் சற்குணம்.

இன்னும் சில நாட்களில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி , நஸ்ரியா என்றாலே ‘நான்கு அடி’ தள்ளி நிற்க வேண்டும் போல…

Read Previous

ஹன்சிகா நடிக்கும் ‘அரண்மனை’

Read Next

‘ஜில்லா’ – கேரளா உரிமையை வாங்கிய மோகன்லால்