விஜய், மோகன்லால், காஜல் அகர்வால் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தின் கேரளா உரிமையை அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மலையாள நடிகர் மோகன்லால் வாங்கியிருக்கிறார்.
விஜய் நடித்து தமிழில் வெளியாகும் படங்களுக்கு கேரளாவில் எப்போதுமே நல்ல வசூல் உண்டு. அதிலும் இந்த படத்தில் மோகன்லால் வேறு நடிப்பதால் படத்திற்கு கேரளாவில் கண்டிப்பாக நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலரும் கேரளா உரிமையை வாங்க போட்டி போட்டதில் மோகன்லால் பங்குதாரராக உள்ள ஆசீர்வாத் சினிமாஸ் அந்த உரிமையை கைப்பற்றியுள்ளது.