நண்பருக்காக கமல் எழுதி, பாடிய பாட்டு…

kamalhassan-and-director-rc-sakthi‘உணர்ச்சிகள், மனிதரில் இத்தனை நிறங்களா, தர்மயுத்தம், சிறை, மனக் கணக்கு, கூட்டுப் புழுக்கள், தாலி தானம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.சி. சக்தி தற்போது ‘ரோஜாக்கள் ஐந்து’ என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார்.

மனிதர்களிடையே வன்முறைக்கு இடம் கொடுக்கக் கூடாது. தவறு செய்தவன் திருந்தினால் அவனை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் சொல்லும் படம் இது.

இந்த படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் ஒரு பாடலைப் பாடிக் கொடுத்திருக்கிறார்.

கமல்ஹாசன், ஆர்.சி. சக்தி இருவருமே பல வருடங்களாக இணைபிரியாத நண்பர்கள்.

ஆர்.சி. சக்தி இயக்கத்தில் கமல்ஹாசன் ஆரம்ப காலங்களில் ‘உணர்ச்சிகள், மனிதரில் இத்தனை நிறங்களா’ போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

ஆர்.சி. சக்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க கமல்ஹாசன் அவரே ஒரு பாடலை எழுதி பாடியும் கொடுத்திருக்கிறார். இந்த பாடலுக்கு 80களில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்த ஷ்யாம் இசையமைத்திருக்கிறார்.

இதுவல்லவோ நட்பு…

Read Previous

ரஜினியின் அடுத்த படம்…உலா வரும் வதந்தி…

Read Next

நல்லாத்தான் சொல்றாங்க…ஆனா, எடுக்க மாட்றாங்க.. – கார்த்தி