கஜினியில் நடிக்கக் காரணம் சூர்யா – ஆமீர் கான்

aamir-khan-and-abhishek-bachchanமீர்கான், அசின் நடித்த ‘கஜினி’ ஹிந்தித் திரைப்படம் பாலிவுட்டில் மாபெரும்  வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர். முருகதாசை, ஆமீர் கான் அப்போதே புகழ்ந்து தள்ளினார்.

நேற்று அப்படத்தில் நான் நடிக்கக் காரணம் சூர்யாதான் என சூர்யாவை புகழ்ந்தார்.

ஆமீர் கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, காத்ரீனா கைப் நடித்துள்ள ‘தூம் 3’ படம் தமிழில் டப் செய்யப்பட்டு வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தை தமிழ்நாட்டிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் ‘தூம் 3’ படக்குழுவினர் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய ஆமீர் கான், ‘கஜினி’ படத்தைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசினார்.

“தமிழில் ‘கஜினி’ வெளிவந்ததும் அந்த படத்தை விரும்பிப் பார்த்தேன். சூர்யாவின் நடிப்பைப் பார்த்து அசந்து போனேன். அவர் அளவுக்கு என்னால் நடிக்க முடியுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.

வில்லன்களைத் துரத்தி பழி வாங்கும் கதையில் இதற்கு முன் நான் நடித்ததில்லை. இப்படத்தில் நடிக்க முடிவானதும் சூர்யாவிடம் பேசினேன்.

என்னால் உங்கள் அளவுக்கு நடிக்க முடியுமா என்ற எனது சந்தேகத்தை அவரிடம் தெரிவித்தேன். என்னால் நிச்சயம் நடிக்க முடியும் என சூர்யா கொடுத்த தைரியத்தில்தான் ‘கஜினி’ ஹிந்திப் படத்தில் நடித்தேன், ” என்றார்.

மேலும் பேசிய ஆமீர் கான், தான் ரஜினியின் தீவிர ரசிகன் என்றும் குறிப்பிட்டார்.

இயக்குனர் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா, அபிஷேக் பச்சன், காத்ரீனா கைப், உதய் சோப்ரா ஆகியோரும் பத்திரிகையாளர் கலந்து கொண்டனர்.

ஆனால், வந்திருந்த அனைவருமே ஆமீர் கானிடம் மட்டுமே கேள்விகளை எழுப்பினர். அபிகேஷக் பச்சனிடம் ஒரு சில கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டன. அவரும் ஆமீர் கான் பேசுவதை கவனிக்காமல் விட்டத்தைப் பார்த்தே உட்கார்ந்திருந்தார்.

வட இந்தியாவே கொண்டாடும் அழகுப் புயல் காத்ரீனா கைப்பை கூட நம் பத்திரிகையாளர்கள் கண்டு கொள்ளவில்லை என்றார் பாருங்களேன்.

ஏற்கெனவே, ஆமீர் கானுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் இந்த படத்துல சேர்ந்து நடிக்கிறதால பிரச்சனைன்னு பாலிவுட்ல பேசிக்கறாங்க.

இதையெல்லாம் அபிஷேக் படிச்சார்னா (?), இனி ஆமீர் கானோட சேர்ந்து நடிப்பாராங்கறது சந்தேகம்தான்…

Read Previous

நல்லாத்தான் சொல்றாங்க…ஆனா, எடுக்க மாட்றாங்க.. – கார்த்தி

Read Next

சித்தார்த், சமந்தாவை எதிர்க்கும் மகேஷ்பாபு ரசிகர்கள்…