ஓடாத படத்தை ஓட வைப்பதற்குத்தான் எப்படியெல்லாமோ விளம்பரப்படுத்த வேண்டியிருக்கிறது.
ஒரு படம் நல்ல படம் என்றால் அந்த படம் ‘மவுத் டாக்’ என்று சொல்லக்கூடிய வாய் வழி பேச்சினாலேயே நன்றாக ஓடி விடும் என்று அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் சொல்வார்கள்.
வெகு நாட்களாக இல்லாத ஒரு வழக்கத்தை இப்போது மீண்டும் ‘இவன் வேற மாதிரி’ படத்தின் விளம்பரத்திற்காக கையாண்டிருக்கிறார்கள்.
அதாவது, ரஜினிகாந்த் இந்த படத்தை பாராட்டியிருக்கிறார் என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.
இப்படி எவ்வளவோ படங்கள் வருகின்றன, அவையனைத்திற்கும் ரஜினிகாந்த் இப்படி கடிதம் கொடுத்து பாராட்டுகிறாரா. இல்லவே இல்லை.
இந்த படத்தில் சிவாஜி குடும்பத்தின் வாரிசு ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பதாலும், எதிர்பார்த்த அளவிற்கு படம் வரவேற்பைப் பெறவில்லை என்பதாலும் ரஜினிகாந்த்தை அணுகி இந்த படத்தைப் பாராட்டி கடிதம் எழுதி வாங்கி வெளியிட்டிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் படம் நன்றாக இருந்தாலே அதை படம் பார்க்கும் ரசிகர்கள்தானே ஓட வைக்க வேண்டும். அப்படியிருக்க இந்த பழைய கால ஸ்டன்ட்லாம் எதற்கு ?
இந்த வாரம் வேற வேற படங்களுக்கு ரசிகர்கள் மாறிட்டாங்களே…