உங்களைக் காட்டும் ‘சதுரங்க வேட்டை’…

sadhuranka vettai_00006பிக்சர் ஹவுஸ் சார்பில் இயக்குனர், நடிகர் மனோபாலா தயாரிக்க வினோத் இயக்கி வரும் படம் ‘சதுரங்க வேட்டை’.

இந்த படத்தில் ‘நாளை, சக்கர வியூகம், மிளகா’ போன்ற படங்களில் நாயகனாக நடித்தவரும் ஹிந்தித் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவருமான நட்ராஜ் சுப்ரமணியம் கதாநாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக இஷாரா நடிக்க, பொன்வண்ணன், இளவரசு, பிறைசூடன், தரணி, வளவன், ராமச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

சீன் ரால்டன் இசையமைக்க வைரமுத்து, கார்க்கி, கணேஷ்குமார் பாடல்களை எழுதுகிறார்கள்.

இயற்கையோட சமநிலை தவறும் போது நடக்கிற அழிவு மாதிரி, மனுஷனோட சமநிலை தவறும் போதும் அழிவு நடக்கும், இதுதான் இந்த படத்தோட மையக் கரு.

‘‘இங்க பணம் இருந்தால் ஹீரோ ஆகலாம், எம்.பி. ஆகலாம். எவனையாவது பிடிக்கலைன்னா அடிக்கலாம். பணம் இருந்தால் என்ன வேணா பண்ணலாம்னா, பணம் சம்பாதிக்க என்ன பண்ணால் என்னன்னு நினைக்கிற ஒருத்தனோட கதைதான் இந்த ‘சதுரங்க வேட்டை’.

நல்லவனா வாழ்ந்தால் செத்த பிறகு சொர்க்கத்துக்குப் போகலாம். கெட்டவனா வாழ்ந்தால் வாழும் போதே சொர்க்கத்துல வாழலாம்னு சொல்ற ஹீரோவோட கதையை முழுக்க முழுக்க காமெடியா செல்றோம்.

புதுமையான வசனங்கள் கலந்து , ஆறு எபிசோடுகளா திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கு. ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்குத் தரும்.

மொத்தத்துல நம்ம சமூகத்து முன்னாடி வைக்கப்படற கண்ணாடி இந்த படம். சிரிக்கவும் வைப்போம், அதே சமயம் சிந்திக்கவும் வைப்போம்.

உங்களை நீங்களே ‘சதுரங்க வேட்டை’ல பார்க்கலாம்,” என்கிறார் இயக்குனர் வினோத்.

Read Previous

ஏ.ஆர்.முருகதாஸை அழ வைத்த படம்…

Read Next

அந்த ‘ஏரியா’வும் என்னோடது – சிவகார்த்திகேயன் அதிரடி…