எஸ்.ஆர். பிரபாரகன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘இது கதிர்வேலன் காதல்’.
இந்த படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
‘சுந்தரபாண்டியன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கும் படம் என்பதாலும், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் என்பதாலும் இருவருக்குமே இந்த படம் ஒரு முக்கியமான படமாகும்.
குடும்ப சென்டிமென்ட்டுடன், காதல், நகைச்சுவை என கலகலப்பான படமாக உருவாக்கியிருக்கிறார்களாம்.
பிப்ரவரி 14ம் தேதி இப்படம் வெளியாகிறது.
