‘ராஜா ராணி’ வெற்றியின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸை வெற்றிகரமாக ஆரம்பித்தவர் நயன்தாரா.
அடுத்த வாரம் அவர் நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படமும், அதற்கடுத்து அவருக்கே அதிக முக்கியத்துவம் உள்ள ‘அனாமிகா’ படமும் வெளி வர இருக்கின்றன.
அது மட்டுமல்லாது, மீண்டும் உதயநிதி ஜோடியாக ‘நண்பேன்டா’, சிம்புவுடன் பெயரிடப்படாத படம், ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படம் என இந்த ஆண்டிலும் பிஸி நடிகையாகவே இருக்கிறார்.
சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் சினிமாவில் தான் நிறையவே பாடம் கற்றுக் கொண்டேன் என கூறியுள்ளார் நயன்தாரா.
“ நம்ம வாழ்க்கையில பிரச்சினைகள் வர்றதே அதுல இருந்து பாடம் கத்துக்கத்தான். சினிமா உலகம் எப்படி பணம், புகழைக் கொடுக்குதோ அதுக்கும் மேல நிறைய பாடங்களைக் கொடுக்கும். அந்த வகையில் நான் நிறைய கத்துக்கிட்டேன்.
இப்போ நிறைய படங்கள் தொடர்ச்சியா பண்ணிட்டு இருக்கேன். திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவே இல்ல. இந்த நிமிஷம் ரொம்ப நிறைவா என்னோட வேலையை செஞ்சுகிட்டு இருக்கேன். கல்யாணத்துக்காக நான் காத்திருக்கலை. ஆனா, அதேநேரம் கல்யாணத்தைத் தவிர்க்க விரும்புற ஆளும் நான் இல்லை. எல்லாம் நடக்குறப்ப நல்லபடியா நடக்கும்,” என்று கூறியுள்ளார்.
