சமந்தாவையும், ட்விட்டரையும் பிரிக்கவே முடியாது. அடிக்கடி எதையாவது ட்வீட் செய்து கொண்டேயிருப்பார்.
மற்ற நடிகைகளை விட ட்விட்டரில் ‘ஆக்டிவ்வாக’ இருப்பது அவர் மட்டுமே.
இந்த ஆண்டின் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடிப்பதற்காக முக்கிய ஹீரோக்களான சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படத்திலும், விஜய்யுடன் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார்.
‘அஞ்சான்’ படப்பிடிப்பு தற்போது வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் பணியாற்றி வருவதைப் பற்றி சமந்தா ட்விட்டரில் குறிப்பிட்டுள்தாவது.
“அஞ்சான்’ படத்திற்காக கடினமான, வேகமான டான்ஸ் பாடல் ஒன்றை படமாக்கினோம். பின்னால், ஆடும் டான்சர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். குடைகள் கிடையாது, ஜுஸ் கிடையாது, கேரவன் கிடையாது. அதிகமான சூட்டில்…அவங்கள்லாம் கலக்கறாங்க,” என குறிப்பிட்டுள்ளார்.
அப்படியே தயாரிப்பாளர் கிட்ட சொல்லி ஜுஸ் மட்டுமாவது வாங்கி கொடுத்திருக்கலாமே…
