ஏ.ஆர். ரகுமான், ஹாரிஸ் மீது இயக்குனர் குற்றச்சாட்டு…

director seenu ramasamy

அசோக் செல்வன், ஜனனி ஐயர் நடித்துள்ள ‘தெகிடி’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

‘தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை’ ஆகிய படங்களை இயக்கியவரும் தற்போது யுவன்ஷங்கர் ராஜா – வைரமுத்து கூட்டணியில் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை இயக்கி வரும் சீனு ராமசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது, இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.

“அந்தக் காலத்தில் இசையமைப்பாளர் எம்எஸ்வி , எம்ஜிஆர் படங்களுக்கு இசையமைத்து வந்த போதும் பல சிறிய படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். இளையராஜாவும் அதை கடைபிடித்திருக்கிறார்.

ஆனால், இப்போது ஏ.ஆர். ரகுமானும், ஹாரிஸ் ஜெயராஜும் சிறிய படங்களுக்கு இசையமைப்பதேயில்லை. அவர்களது சம்பளமே ஒரு சிறிய படத்தின் மொத்த பட்ஜெட்டாக இருக்கிறது.

பெரிய இசையமைப்பாளர்கள் சிறிய படங்களுக்கு இசையமைத்தால், அந்த படங்கள் ரசிகர்களால் கவனிக்கப்பட்டு, அவர்களைப் பார்க்கவும் வைக்கிறது. ஆனால், அவர்கள் அதை செய்வதில்லை,” என்று குறைபட்டுக் கொண்டார்.

உண்மைதான்…பல புது இயக்குனர்களின் படங்களில் அவர்களது இசை இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

வைரமுத்து போன்றவர்கள் இளையராஜாவுக்கு யோசனை சொல்கிறார்களே, அது போல் ஏ.ஆர். ரகுமானுக்கும், ஹாரிஸுக்கும் யோசனை சொல்லலாமே….?

 

Read Previous

பண்ணையாரும் பத்மினியும் – விமர்சனம்

Read Next

‘ஃபெப்ஸி’ அமைப்புக்கு பாதிக்கப்பட்ட இயக்குரின் கடிதம்…