நஸ்ரியாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது…

nazria-engagement

நடிகை நஸ்ரியாவுக்கும், பிரபல இயக்குனர் ஃபாசிலின் மகன் ஃபஹத் பாசிலுக்கும் இன்று கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி திருவந்தபுரத்தில் திருமணம் நடக்க உள்ளது. 24ம் தேதி ஆலப்புழையில் வரவேற்பு நடக்க உள்ளது.

ஃபஹத் பாசில் , மலையாளத் திரையுலகில் முன்னணி ஹீரோவாக உள்ளார். நஸ்ரியா, மலையாளம், தமிழ் இரு மொழிகளிலும் குறுகிய காலத்தில் சிறந்த புகழை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பிறகு நஸ்ரியா நடிப்பாரா என்பது குறித்து எந்த செய்திகளும் வெளியாகவில்லை.

Read Previous

ஆன்ட்ரியா ஆல்பம் – கமல்ஹாசன் வெளியிடுகிறார்…

Read Next

யுவன் மதம் மாறியதன் பின்னணி…