ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன், கட்டமரன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘தரமணி’.
‘தங்க மீன்கள்’ படத்திற்குப் பிறகு ராம் இயக்கும் இந்த படத்தில் புதுமுகம் வசந்த் ரவி, ஆன்ட்ரியா மற்றும் பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்த படத்திற்காக ஆன்ட்ரியா இசையமைத்து பாடிய ‘The Soul of Taramani’ என்ற பாடலை கமல்ஹாசன் நாளை வெளியிடுகிறார்.
‘தரமணி’ படப்பிடிப்பின் போது ஆன்ட்ரியாவின் கைபேசியில் இருந்த சில பல இசையமைப்புகளை இயக்குனர் ராம் கேட்டிருக்கிறார். அதில் ஒரு இசையமைப்பானது ‘தரமணி’ ரயில் நிலையத்தின் ஆன்மாவை பிரதிபலிப்பாய் இருந்ததாம்.
ஆங்கில வரிகளை அவரே எழுதி பாடியிருந்தார். பின்னணிப் பாடகியாகவும் இருக்கும் ஆன்ட்ரியாவின் இசைப் புலமையும் இசை ஆர்வமும் இயக்குனர் ராமை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
படப்பிடிப்பின் இடையே இந்த பாடலை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். வெளியிடும் நோக்கில் பயிற்சிக்காக எடுக்கப்பட்ட இந்த பாடலை ‘தரமணி’ படத்தின் விளம்பரத்திற்காக வெளியிடலாம் என்ற யோசனையை ஆன்ட்ரியா தெரிவித்திருக்கிறார்.
அவருக்கிருந்த ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் கருத்தில் இந்த பாடலை நாளை வெளியிடுகிறார்கள்.
அதோடு படத்தின் காட்சிப் புத்தகத்தை இயக்குனர் பாரதிராஜா வெளியிடுகிறார்.
இப்போது ஒரு பாடல்…அடுத்து…ஆன்ட்ரியா இசையமைக்கப்போகும் படமும் விரைவில் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
