ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 2012ம் ஆண்டு வெளிவந்த ‘கஹானி’.
கர்ப்பிணிப் பெண்ணாக வித்யா பாலன் நடித்த இந்த படம் அற்புதமான விமர்சனங்களையும், நல்ல வசூலையும் பெற்ற ஒரு திரைப்படம்.
இப்படத்தை தற்போது வயா காம் மோஷன் 18 பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கில் தயாரித்துள்ளது. பிரபல தெலுங்கப் பட இயக்குனரான சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியுள்ளார்.
தெலுங்கில் ‘அனாமிகா’ என்று பெயரிட்டனர். ஆனால், தமிழில் பொருத்தமான தலைப்புக்காக இத்தனை நாட்களாக காத்திருந்தனர்.
இப்போது, படத்தின் கதைக்கு பொருத்தமாக ‘நீ எங்கே என் அன்பே’ என பெயரிட்டிருக்கின்றனர். காணாமல் போன கணவனைத் தேடி வரும் ஒரு அபலைப் பெண்ணைப் பற்றிய கதைதான் இந்த படம்.
ஹிந்தியிலிருந்து தமிழுக்கு நிறையவே மாற்றியிருக்கிறார்கள். அதில் முக்கியமானது, நயன்தாரா இந்த படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கவில்லை.
வரும் 14ம் தேதியன்று இப்படத்தின் டிரைலர் வெளியீடு நடக்கிறது, இம்மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது.
