‘வாலு’ தாமதம்…நான் காரணமில்லை… – ஹன்சிகா

hansika-1202

சிம்பு நாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘போடா போடி’. இந்த படத்திற்குப் பிறகு அவர் நாயகனாக  நடித்த படங்கள் எதுவுமே வரவில்லை.

‘வாலு’ படம் மட்டுமே முக்கால்வாசி படப்பிடிப்பை கடந்திருக்கிறது. அதுவும் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் நடிக்கும் போதுதான் சிம்புவும், ஹன்சிகாவும் காதல் வலையில் விழுந்தனர். சமீப காலமாக இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால் ‘வாலு’ படத்தில் நடிக்க ஹன்சிகா தாமதப்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை மறுக்கிறார் ஹன்சிகா.

“என்னால எந்த படமும் இதுவரைக்கும் தாமதம் ஆனதே இல்லை. ‘வாலு’ படத்துக்காக என்னோட முழு ஒத்துழைப்பையும் கொடுத்திருக்கிறேன். கொஞ்ச நாள் முன்னாடி கூட ஹைதராபாத்ல ஷுட்டிங்க இருக்கு வாங்கன்னு சொன்னாங்க.

உடனே, நான் போனேன். ஆனால், ஷுட்டிங் நடக்கவேயில்லை. டைரக்டருக்கு போன் போட்டால், அவர் கிட்ட இருந்து எந்த தகவலும் இல்லை. அமைதியா இருக்கார். இந்த பிரச்சனைக்குலாம் நான் காரணமில்லை, டைரக்டரைப் போய்க் கேளுங்க,” என்கிறார்.

அழகான பெண்கள் பொய் சொல்ல மாட்டார்கள்தானே…

Read Previous

இயக்குனர்கள் தயாரிப்பாளர்களாக வேண்டும் – பாண்டிராஜ்

Read Next

விஜயகாந்த் நடிக்காதது இழப்பு – வருத்தப்படும் இயக்குனர்