மலையாள ரசிகர்கள்தான் சிறந்தவர்கள் – த்ரிஷாவின் திடீர் மலையாள பாசம்

trisha 1702

நமது ஹீரோயின்களுக்கு எப்படி பேசினால் ரசிகர்களைக் கவர முடியும் என்பது தெரியாதா என்ன ?

அப்படித்தான் சமீபத்தில் கொச்சி சென்ற நடிகை த்ரிஷா அங்கு மலையாள ரசிகர்களைக் கவரும் விதத்தில் ‘நானும் மலையாளிதான்’ என்ற ரேஞ்சில் பேசி அங்குள்ள ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார்.

“என்னோட பாட்டி பாலக்காட்டுலதான் இருக்காங்க. நானும் அவங்கள நேரம் கிடைக்கும் போது போயி பார்த்துட்டு வருவன்.

எனக்குப் பிடிச்ச நடிகர் மோகன்லால். எனக்கும் மலையாளப் படத்துல நடிக்க ஆசையா இருக்கு. நல்ல கதை வந்தால் கண்டிப்பா நடிப்பேன். மலையாளத்துல நிறைய நல்ல சினிமாக்கள் வருது.

இங்கயும் தமிழ்ப் படங்கள் நல்லா ஓடுது. ரசிகர்கள் தமிழ்ப் படங்களுக்கு  மட்டுமில்லாம, தெலுங்குப் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கொடுக்கறாங்க,” என்று பேசியுள்ளார்.

10 வருஷமா தமிழ், தெலுங்குல முன்னணி நடிகையா இருந்துட்டு வர்ற த்ரிஷாவுக்கு புதுப்புது நடிகைகள் வந்ததால இங்க இப்ப அவ்வளவா படங்கள் இல்ல…

அதனால, மலையாளப் படங்கள்ல நடிக்கிற முடிவுக்கு வந்திருக்காங்க போல.

அதான் மலையாள ரசிகர்கள் மேல அவ்வளவு பாசத்தை காட்ட ஆரம்பிச்சிட்டாங்க…

Read Previous

தமிழில் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய்…

Read Next

கிரிக்கெட்டில் விஷாலுக்கு அடி…பதறிய வரலட்சுமி…

Most Popular