அடுத்த படம்…அசத்தல் ‘லுக்’கில் தயாராகும் அஜித்…

ajith 1702

“ஆரம்பம், வீரம்”  என அடுத்தடுத்து ஹிட் படங்களில் ‘சால்ட் பெப்பர்’ லுக்கில் நடித்த அஜித் , கௌதம் மேனன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்காக அசத்தலான புது ‘லுக்’கில் தயாராகி வருகிறாராம்.

மேற் சொன்ன இரண்டு படங்களிலும் அஜித்தின் நரைத்த தலைமுடி தோற்றம் அஜித்தின் தீவிர ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகத்தான் அமைந்தது.

அவரை பழையபடி ‘காதல் மன்னன்’ தோற்றத்தில் பார்க்க வேண்டும் என பல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதையெல்லாம் கவனித்த இயக்குனர் கௌதம் மேனன், அவர் இயக் உள்ள படத்தில் அசத்தலான தோற்றத்தில் அஜித்தை தயாராகும்படி கேட்டுக் கொண்டாராம்.

இதற்காக ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் அஜித், முன்பை விட மிகவும் ஸ்லிம்மாக மாறி வருகிறாராம். அது மட்டுமல்ல படத்தில் அஜித்தின் ஹேர் ஸ்டைல் முதல் கொண்டு அவரது தோற்றத்தை இதுவரை பார்க்காத வகையில் உருவாக்கப் போகிறார்களாம்.

அஜித்தின் ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார். அநேகமாக ஏ.ஆர்.ரகுமான் படத்திற்கு இசையமைக்கலாம்.

படத்தைப் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Read Previous

கிரிக்கெட்டில் விஷாலுக்கு அடி…பதறிய வரலட்சுமி…

Read Next

‘குக்கூ’ குழுவுக்கு தலை வணங்குகிறேன் – சூர்யா