ஆமாம்…ஆன்ட்ரியாவைக் காதலித்தேன்… – அனிருத்

music-director-anirudh

‘கொல வெறி’ பாடல் மூலம் ஒரே நாளில் உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளர் அனிருத், அதன் பின் ஒரே ஃபோட்டோவின் மூலமும் புகழைப் பெற்றார்.

அந்த ஃபோட்டோவில் அனிருத்தும், ஆன்ட்ரியாவும் இதழோடு இதழ் பதித்திருந்த காட்சி ‘அ….ஆ…’ என ஆச்சரியப்படும்படி இருந்தது.

இருவரும் காதலித்தார்கள், பிறகு பிரிந்து விட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் அனிருத், ஆன்ட்ரியாவைக் காதலித்ததைப் பற்றி கூறியுள்ளார்.

அதில், “ஆன்ட்ரியாவை நான் காதலித்தது உண்மைதான். அதெல்லாம் முடிந்து போன ஒரு காலம். அதைப் பத்திலாம் இனிமேல் பேச விருப்பமில்லை.

இப்பவும் எனக்கு நிறைய காதல் மனுக்கள் வருது. அதெல்லாமே என்னோட இசைக்குதானே தவிர, எனக்கு அல்ல. நான் சட்டைய கழட்டிட்டால் ஒரு பத்து கிலோ கூட இருக்க மாட்டேன். என்னை எந்த பொண்ணுக்குப் பிடிக்கும் சொல்லுங்க, ” என்கிறார்.

அனிருத்துக்கு இப்போதுதான் 22 வயது ஆகிறதாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ‘ஒய் திஸ் கொல வெறி…’ பாடல் வெளியானது.

அப்படியென்றால் 20 வயதிலேயே காதலித்திருக்கிறார்…

சரி…சரி…‘காதலுக்குக் கண்ணில்லை…’ என்பார்கள்…அது போல வயதும் இல்லை…

Read Previous

‘குக்கூ’ குழுவுக்கு தலை வணங்குகிறேன் – சூர்யா

Read Next

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா… – இன்று ஆரம்பம்