சென்னைக்கு அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் நடந்த பார்முலா-3 கார்பந்தயத்தில் ‘வா-டீல்’ பட டைட்டில் லோகோவை வெளியிட்டார்கள்.
இப்படத்தில் கார், பைக் ரேஸ் போன்ற அம்சங்கள் கதைக்குள் இருப்பதாலும், ரேஸ் காரின் வேகம் போல் திரைக்கதை அமைந்திருப்பதாலும், சென்டிமென்டாக இருக்கும் என்பதற்காக வித்தியாசமான முறையில் “வா-டீல்” டைட்டில் லோகோவை வெளியிட்டுள்ளார்கள்.
இந்தியாவில் வளர்ந்து வரும் கார் பந்தய வீரர் “Mihir Dharkar” ஒட்டிய கார் நம்பர் 9-இல் ‘வா-டீல்’ பட லோகோ பொருத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் அருண் விஜய், இயக்குனர் சிவஞானம், கேமராமேன் கோபி ஜெகதீஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் M.ஹேமந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விறுவிறுப்பாக நடந்த வா-டீல் படப்பிடிப்பின் கடைசி நாளன்று பூசணிக்காய் உடைத்து, கேக் வெட்டி, பட்டாசு வெடித்து, படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.
மிக விரைவில் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.
