நடிகை ஷகிலா கதை படமாகிறது…?

actress-shakeela

ஷகிலா என்று சொன்னாலே தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அப்படி தெரியாவதவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் தமிழ் சினிமா பார்க்காதவர்களாக….சாரி…மலையாள சினிமா பார்க்காதவர்களாக இருப்பார்கள்.

மலையாளத்தில் ஆனானப்பட்ட மோகன்லால், மம்முட்டியையே தனது படத்தின் வசூலால் கலங்கடித்தவர் ஷகிலா. அதன் பின், அவர்கள் ஏறக்குறைய ஷகிலாவை கேரளாவை விட்டே விரட்டி அடித்த நிலைக்கு தள்ளினார்கள்.

பின்னர் தமிழ் சினிமா பக்கம் வந்து சில படங்களில் நடித்து இங்கும் புகழ் பெற ஆரம்பித்தார்.

தற்போது ஷகிலா அவரது வாழ்க்கை வரலாற்றை கதையாக எழுதி வருகிறாராம். பல உண்மை சம்பவங்கள் அதில் இடம் பெறுகிறதாம். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு தயாரிப்பாளர் அவரே படத்தைத் தயாரிக்க முன் வந்திருக்கிறாராம்.

இந்த படத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகள் சிலரையும் தொடர்பு கொண்டுள்ளதாகக் கேள்வி.

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இப்படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஹிந்தியில் எடுக்கப்பட்ட ‘ டர்ட்டி பிக்சர்’ படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது.

அதைப் போலவே இந்த படத்தையும் தயாரிக்கப் போகிறார்களாம்.

பூஜை போட்ட அன்றே அனைத்து ஏரியாவும் விற்று விடுமே….?

Read Previous

ஐஸ்வர்யா ராய் நடிப்பது உண்மைதான் – பி. வாசு

Read Next

இன்றைய ரிலீஸ் – 5 படங்கள்