இந்த வாரம் 7 தமிழ்ப் படங்கள் ரிலீஸ்… ?

vallinam 2402

வரும் வெள்ளியன்று 28ம் தேதி வல்லினம், தெகிடி, பனி விழும் மலர்வனம், காதல் சொல்ல ஆசை, அமரா, அங்குசம், வங்கக் கரை ஆகிய படங்கள் வெளி வர உள்ளன.

அது மட்டுமின்றி மலையாளத்திலிருந்து டப்பிங் செய்யப்பட்ட ‘வெற்றி மாறன்’,  தெலுங்கிலிருந்து டப்பிங் செய்யப்பட்டுள்ள ‘கரன்சி ராஜா’ ஆகிய படங்களும், ஹாலிவுட்டிலிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ள “நான் ஸ்டாப், ஆக்ஷன் கிட்ஸ், பறக்கும் கல்லறை மனிதன்,” ஆகிய படங்களும் வெளிவர உள்ளன.

மொத்தமாகப் பார்த்தால் 12 படங்கள் வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் ஒரே நாளில் அதிகமாக படங்கள் வெளிவருவது இதுவே முதல் முறை.

இருந்தாலும் இன்னும் 4 நாட்கள் உள்ளதால் ஒரு சில படங்களின் வெளியீடு தள்ளிப் போகவும் வாய்ப்பிருக்கிறது.

மார்ச் மாதம் தேர்வு மாதம் என்பதாலும், 12ம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 3ம் தேதி ஆரம்பமாக உள்ளதாலும், ஏப்ரலுக்கு “கோச்சடையான், மான் கராத்தே, நான் சிகப்பு மனிதன்” போன்ற பெரிய படங்கள் வர இருப்பதாலும் இம்மாதத்தின் கடைசி வாரமான 28ம் தேதியன்று இத்தனை படங்கள் வருகின்றன என்கிறார்கள்.

ஒரு பக்கம் படங்களின் வெற்றி விகிதம் குறைந்து கொண்டே வந்தாலும் படங்களின் வெளியீட்டு விகிதம் அதிகமாகிக் கொண்டே வருவது கவலையளிப்பதாக உள்ளது என திரைப்பட வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் கவனித்தால் நன்றாக இருக்கும்…

Read Previous

தமிழில் நடிக்க மாட்டேன் என்பது பொய்ச் செய்தி – ப்ரியா மணி

Read Next

ஒரே நாளில், ஒரே தயாரிப்பாளரின் 3 இசை வெளியீடு…