விஷால், லட்சமிமேனன், சூரி, விக்ராந்த், பாரதிராஜா மற்றும் பலர் நடித்து இமான் இசையமைப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வருடம் தீபாவளியன்று (நவம்பர் 2, 2013) வெளியான படம் ‘பாண்டிய நாடு’.
தீபாவளிக்கு வெளிவந்த படங்களில் அதிகமான வரவேற்பைப் பெற்று இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே இந்த வருடம் பொங்கலன்று (ஜனவரி 14, 2013) ராஜ் டிவியில் ஒளிரப்பப்பட்டது.
ஏறக்குறைய 75 நாட்களுக்குள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும், இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 நாட்களைக் கடந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஒரு படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பின்னும், தொடர்ந்து வெற்றிகரமாக ஓடியது இதுவே முதல் முறை.
அந்த வெற்றியின் சுவடுகளோடு விரைவில் விஷால், லட்சுமி மேனன் மீண்டும் இணைந்து நடிக்கும் படமான ‘நான் சிகப்பு மனிதன்’ இசை வெளியீடு மார்ச் மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்ப் புத்தாண்டு அன்று படம் வெளி வருகிறது.
அடுத்த ஹிட்டுக்கு ரெடியாகிறார் விஷால்…
