ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் டாக்டர்.எல்.சிவபாலன் மற்றும் காபி சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘உறுமீன்’.
இது ஒரு ஆக்ஷன், த்ரில்லர் கதை. இப்படத்தை சக்திவேல் பெருமாள்சாமி இயக்குகிறார். அச்சு இசையமைக்கிறார். ஸ்ரீசரவணன், ஜி.மனோகரன் ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
‘சூது கவ்வும், நேரம்,’ திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி நடிக்கிறார்.
மற்றும் காளி வெங்கட், கலையரசன், நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் பூஜை ஜீரோ ரூல்ஸ் அலுவலகத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். தயாரிப்பாளர் சி.வி.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் 5ம் தேதி சென்னையில் ஆரம்பமாகி தொடர்ந்து கோவை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
