‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கி வரும் பிரம்மாண்டமான படம் ‘ஐ.’
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் மற்றும் பலர் நடிக்க முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் தயாராகி வருகிறது.
இப்படம் பற்றிய தகவல் ஒன்றை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டிருக்கிறார்.
பல தடங்கல்களுக்கிடையே ‘ஏ (A) முதல் ஒய் (Y) வரை ‘ஐ’ (Ai) படத்தை முடித்து விட்டோம். இன்னும் ‘Z’ மட்டும்தான் பாக்கி. எமி ஜாக்சனின் ஒரு பாடலுடன் அதுவும் முடிந்து விடும்.
விக்ரம், வீடாவின் காட்சிகள் அனைத்தும் பிப்ரவரி 25ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
எடிட்டிங், டப்பிங், கிராபிக்ஸ் காட்சிகள் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எப்போதும் படம் வெளிவருகிறது என்ற கேள்வியை தொடர்ந்து என்னிடம் கேட்டு வருகிறார்கள். எல்லாம் நல்லபடியாக நடந்தால் கோடை விடுமுறையில் படம் வெளிவர வாய்ப்புள்ளது.
மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பு என்பதால் தயாரிப்பாளரின் திட்டப்படி படத்தின் வெளியீடு இருக்கும், ” என தெரிவித்துள்ளார்.