கமல் ஜோடியாக நடிக்கிறேனா ? – சிம்ரன் விளக்கம்

simran 0603மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘த்ரிஷ்யம்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

கமல்ஹாசன் தற்போது ‘உத்தம வில்லன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் ‘த்ரிஷ்யம்’ படம் ஆரம்பமாக உள்ளது.

‘த்ரிஷ்யம்’ படத்தில் கமல் ஜோடியாக மலையாளப்படத்தில் நடித்த மீனா அல்லது சிம்ரன் ஆகியோர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், சிம்ரன் இதை மறுத்துள்ளார்.

‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கில் எந்த மொழியிலும் நான் நடிக்கவில்லை. திரைப்படத் துறையில் என்னுடைய திட்டங்களைப் பற்றி மீடியாவிற்கு சரியான நேரத்தில் சொல்லுவேன், ” என சிம்ரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Read Previous

அம்மா நடிகை சொன்னதால் கதையை மாற்றிய இயக்குனர் ?

Read Next

இன்றைய ரிலீஸ் – 4 படங்கள்…