நடிகராகும் அடுத்த இசையமைப்பாளர்…

kallappadam newsஇசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார் ஆகியோரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ‘கே’, ‘கள்ளப்படம்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக  பணியாற்றிய ஜே.வடிவேல் இயக்கத்தில், இறைவன் பிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும்  படம் ‘கள்ளப்படம் ‘.

நான்கு இளைஞர்கள் திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்று எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின்  எதிர் கால கனவுகளைப் பற்றிய படம் இது .

அந்த நான்கு இளைஞர்களாக இயக்குனர் ஜே.வடிவேலுவுடன் , இசை அமைப்பாளர் கே, மற்றும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளரும் , படத்தொகுப்பாளரும் நடிகர்களாக அறிமுகம் ஆகின்றனர் .

ஒரு படத்தின் பிரதான தொழில் நுட்ப கலைஞர்கள் படத்தின் முக்கிய கதா பாத்திரங்களாக நடித்து இருப்பது இதுவே முதல் தடவை ஆகும் .

கதாநாயகியாக நடிப்பவர் லக்ஷ்மி ப்ரியா , இவரது கதாபாத்திரத்தைச் சுற்றிதான் படத்தின் பிரதான பாத்திரங்களும் அமைய பெற்றுள்ளது .

‘ கள்ளப்படம் ‘ திரைப்படத்தின் பாடல் ஒன்றில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மட்டுமே உருவாக்கியிருக்கிறார் இசையமைப்பாளர் கே. ‘கும்கி’ புகழ் மகிழினி குரலில் சர்வதேச மகளிர்  தினமான மார்ச் 8ஆம் தேதி  ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

தயாரிப்பாளர்களின்  சீரிய முயற்சியால் அடுத்த கட்ட இசையமைப்புப் பணியை ஆஸ்திரேலியாவில் தொடர உள்ளனர் . முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் இசைப் பதிவு செய்யும் இந்திய இசை அமைப்பாளர் என்பதால் இசை அமைப்பாளர் கே  வின் நடையிலும் கங்காருவின் துள்ளல் தெரிகிறது, அது இசையிலும் வெளிப்படும் என்பது உறுதி.

படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Read Previous

பாலா – விஜய் சேதுபதி இணையும் ‘வசந்த குமாரன்’

Read Next

மதுமிதா இயக்கும் ‘மூணே மூணு வார்த்தை’…