‘திருமதி தமிழ்’ என்ற ஒரே படத்தில் நடித்து திரைப்பட ரசிகர்களை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ‘சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன்.
‘பவர் ஸ்டார்’ என்கிற சீனிவாசன் பரபரப்பாக இருந்த சூழ்நிலையில் ராஜகுமாரனின் ஹீரோ என்ட்ரியும் பரபரப்பாக பேசப்பட்டது.
அதற்கு முன் அவர் இயக்கிய படங்கள் அவரைப் பற்றி பேசியதை விட ‘திருமதி தமிழ்’ மூலம் அவருக்குக் கிடைத்த பேரும், புகழும் அதிகம்.
ஏறக்குறைய, ஒரு ஆண்டு கழித்து மீண்டும் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார் ராஜகுமாரன்.
இந்த முறை அவர், சந்தானத்துடன் இணைந்து நடித்திருக்கிறார். சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் ராஜகுமாரன் ஒரு அட்டகாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.
சந்தானம்தான் இதுவரை ஹீரோக்களை ‘கலாய்த்து’ காமெடி பண்ணி வருகிறார். இந்த படத்தில் சந்தானத்தையே கலாய்க்கும் நடிகராக ராஜகுமாரன் நடித்திருக்கிறார்.
“காரம் சாப்பிட்டு கண்ணுல தண்ணி வந்து பாத்திருப்ப, கலாய்ச்சுக் கலாய்ச்சே கண்ணுல தண்ணி வந்து பாத்திருக்கியான்னு” ராஜகுமாரன் பேசற ‘பன்ச்’ வசனங்கள்லாம் படத்துல பட்டையக் கிளப்புற மாதிரி இருக்காம்.
‘கண்ணா லட்டுத் தின்ன ஆசையா’ படத்துல ‘பவர் ஸ்டார்’…. இந்த ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்துல ‘சோலார் ஸ்டார்’….
‘கண்ணா…..ரெண்டு லட்டுத் தின்ன ஆசையா’…..
எவ்வளவோ பார்த்துட்டோம்…இதை பார்க்க மாட்டோமா….?! 🙂 🙂