கவுண்டமணி நடிக்கும் ‘49-ஓ’ – ஒரு பாடல் நாளை வெளியீடு….

49 o  single track newsஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஆராக்கிய தாஸ் இயக்கத்தில், கே இசையமைப்பில் கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாக நடிக்கும் படம் ‘49-ஓ’.

இந்த படத்திற்காக விவசாயி ஆன கவுண்டமணி மழை வேண்டி பாடும் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

கே இசையமைப்பில் உருவான அந்த பாடலை யுகபாரதி எழுதி இருக்கிறார்.

அம்மா போல அள்ளித்தரும் மழைதான்,
அவ ஆதாரமா நின்னா, இல்லை குறைதான்,
அவ நட்டு வச்ச நாத்தை எல்லாம் கதிர் ஆக்குறா,
எங்க புள்ள குட்டி அத்தனைக்கும் பசி ஆத்தறா…

எனத் தொடங்கும் அந்த பாடல் மழைதான் நம் ஆதாராம் என்பதை உணர்த்தும வகையில் படமாக்கப்பட்டது.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்…’ என்ற சூப்பர் ஹிட் பாடலைப் பாடிய ஜெயமூர்த்தி அந்த பாடலைப் பாடியுள்ளார்.

இந்த ஒரு பாடல் நாளை 31ம் தேதி ரேடியோ மிர்ச்சியில் வெளியாக உள்ளது.

விரைவில் படத்தின் இசை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Read Previous

தமிழர் தயாரித்துள்ள ஹாலிவுட் படம்…

Read Next

‘நான் சிகப்பு மனிதன்’ படத்திற்கு ‘முத்தச்’ சிக்கல்…