விஷால், லட்சமி மேனன், இனியா மற்றும் பலர் நடிக்க திரு இயக்கத்தில் ஏப்ரல் மாதம் 11ம் தேதி வெளிவர உள்ள படம் ‘நான் சிகப்பு மனிதன்’.
இந்த படத்தில் காதலர்களான (படத்தில்தான்…) விஷால் – லட்சுமி மேனன் இடையே நெருக்கமான முத்தக் காட்சி ஒன்று இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.
நமக்கு அளித்த பேட்டி (விஷாலை காதலிப்பது உண்மையா ? – லட்சுமி மேனன் பரபரப்புப் பேட்டி) ஒன்றில் கூட லட்சுமி மேனன் அதைப் பற்றி கூறியிருந்தார்.
‘நான் சிகப்பு மனிதன்’ படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்தில் அந்த குறிப்பிட்ட முத்தக்காட்சி இடம் பெற்றால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்குவதாகவும், அந்தக் காட்சியை நீக்கினால் ‘யு’ சான்றிதழ் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அந்த குறிப்பிட்ட முத்தக் காட்சியின் புகைப்படத்தை இணையதளத்தில் யாரோ பரவ விட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் அந்த புகைப்படம் வேகமாக பரவி வருகிறது.
இதன் மூலம் படத்திற்கு மொத்த விளம்பரம்….சாரி…முத்த விளம்பரம் கிடைத்து விடும்.
