ஃபேஸ்புக் – அசத்தும் நடிகைகள்…

facebook-tamil-actress-news

சமூக வலைத்தளங்கள் இன்று பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும் ஒன்றாக செயல்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக், ட்விட்டர், யு டியூப் ஆகிய சமூக வலைத்தளங்களை கோடிக்கணக்கான  இந்தியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

அரசியல், சமூகம், திரைப்படம், விளையாட்டு, பொழுது போக்கு, என பல்வேறு கருத்துக்களை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் சாதாரண மக்கள் கூட அவர்களது எண்ணங்களை பதிவிட சரியான தளங்களாக அவை அமைந்து விட்டன.

முன்பெல்லாம் எழுதத் தெரிந்தவர்கள் பத்திரிகைகளுக்கும், வார, மாத இதழ்களுக்கும் அவர்களது படைப்புக்களை அனுப்பி , ஏதாவது ஒன்று வராதா என காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், இன்று திறமை உள்ள எந்த ஒரு படைப்பாளிக்கும் இப்படியான சமூக வலைத்தளங்கள் மூலம் எண்ணற்ற தொடர்பாளர்கள் கிடைக்கிறார்கள்.

அவர்களது எழுத்துக்கள் பலரையும் சென்றடைகின்றன. ஒரு பக்கம் கண்டவர்கள் எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார்கள் என்ற விமர்சனம் எழுந்தாலும், பலரையும் எழுதத் தூண்டும் ஆர்வத்தை இந்த சமூக வலைத்தளங்கள்தான் உருவாக்கியுள்ளன.

திரைப்படத் துறையைப் பொறுத்த வரையில் படங்களின் விளம்பரங்களுக்கும், நடிக, நடிகையரின் பிரபலத்திற்கும் இந்த சமூக வலைத்தளங்கள் பேருதவி புரிகின்றன.

கடந்த சில வருடங்களாக இதன் வளர்ச்சி மிகையாக அமைந்து , பயன்பாடும் அதிகமாகி விட்டது.

அந்த விதத்தில் தற்போதுள்ள கதாநயாகி நடிகைகளில் ஒரு சிலர் மட்டுமே அதிகாரப்பூர்வமான வலைப் பக்கங்களை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அமோகமாகவே உள்ளது.

இதன் மூலம் கூட அவர்களின் ரசிகர்களின் எண்ணிக்கையை, யாரை அதிகம் பேர் ரசிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த செய்தி வெளியிடப்படுவதற்கு சில நிமிடங்கள் முன் தமிழில் நடித்து வரும் முன்னணி நடிகைகளின் ஃபேஸ்புக் பக்கங்களைப் பார்வையிட்டு, யாருக்கு அதிக ‘லைக்’ உள்ளது என்பதை ஆராய்ந்தோம்.

காஜல் அகர்வால் – 89,46,875

சமந்தா – 47,80,836

நஸ்ரியா – 45,59,771

அனுஷ்கா – 44,55,031

தமன்னா – 30,80,041

அமலா பால் – 28,33,238

இவர்கள் மட்டுமே தொடர்ந்து தங்களது ரசிகர்களுக்காக ஏதாவது ஒரு புகைப்படத்தையோ, செய்தியையோ பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

இந்த ஃபேஸ்புக் பக்கங்கள்  அனைத்துமே ஃபேஸ் புக் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்ட பக்கங்கள் (Verified Page) என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்கள் நடிக்கும் படங்கள்,   ஜோடி சேரும் நாயகர்கள் ஆகியவையும் இவர்களுக்கான லைக்குகளை அதிகம் பெற்றுத் தருவதற்குக் காரணமாக அமைகின்றன.

சில நடிகைகள் ஃபேஸ்புக்கில் இல்லாமல் ட்விட்டர் வலைத்தத்தில் மட்டுமே ‘ஆக்டிவ்’வாக இருக்கிறார்கள். அவர்களில் ஸ்ருதிஹாசன், த்ரிஷா குறிப்பிட வேண்டியவர்கள்.

எண்ணிக்கைகளில் வித்தியாசம் இருந்தாலும் நடிகைகளுக்கும், ரசிகர்களுக்குமான உறவுப் பாலத்தை ஏற்படுத்துவதில் இந்த ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

Read Previous

‘பத்ம பூஷண்’ பணிவை கற்றுத் தந்தது – கமல்ஹாசன் அறிக்கை

Read Next

உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் ‘மான் கராத்தே’…