சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடித்துள்ள ‘மான் கராத்தே’ படம் நாளை மறுநாள் 4ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
அதற்கான முன் பதிவு இன்று காலை ஆரம்பமானது. திரையரங்குகளிலும், இணையதளங்கள் மூலமும் ஆரம்பமான முன்பதிவுக்கு அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது.
4ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ள காட்சிகளிலிருந்து தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு முன்பதிவு இன்று காலையே முடிந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள சுமார் 700 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. கோடை விடுமுறையில் முதலில் வரும் படம் என்பதாலும் படத்திற்கு பாடல்கள் மூலமும், விளம்பரங்கள் மூலமும் ஏற்கெனவே மக்களைச் சென்றடைந்து விட்டதாலும் முன் பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சமீப காலமாக திரையரங்குகளுக்கு அதிக ரசிகர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டை ‘மான் கராத்தே’ படம் பொய்யாக்கி வருகிறது.
ரசிக்க வைக்கும்படியான படங்களுக்கு ரசிகர்கர்களின் வரவேற்பு எப்போதுமே இருக்கும்…