வில்லனா…நானா ? – அரவிந்த்சாமி கோபம்…

arvindswamyகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்தில் அரவிந்த்சாமி, அருண் விஜய் இருவரும் வில்லனாக நடிக்கப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகின.

நாமும் அதைப் பற்றி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். ஆனால், இந்த செய்திகளையெல்லாம் வதந்தி என மறுத்துள்ளார் அரவிந்த்சாமி.

அது மட்டுமல்ல இதெல்லாம் ‘நான்சென்ஸ்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“என்னைப் பற்றி பல அபத்தமான செய்திகளை எழுதியுள்ளார்கள். எந்த படத்துலயும் நான் வில்லனா நடிக்கலை. நானா ட்விட்டர்ல போடற வரைக்கும் இதை மாதிரியான வதந்திகளை நம்பாதீங்க,” என கூறியுள்ளார்.

அரவிந்தசாமி இப்படி கோபப்படுவதற்கும் என்ன காரணமாக இருக்கும். ஒரு காலத்தில் அரவிந்த்சாமி மார்க்கெட் உச்சத்தில் இருந்த போது அவர் கதாநாயகனாக நடித்த ‘பாச மலர்கள்’ படத்தில் அஜித் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். இன்று அஜித் மிகப் பெரிய மாஸ் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார். ஒரு வேளை அது காரணமாக இருக்குமோ….?

ஆக….நாலு ‘அ’-ல ஒரு ‘அ’ போயாச்சி…மீதி மூணு ‘அ’..மிஞ்சுறாங்களான்னு பார்ப்போம்…

Read Previous

‘மான் கராத்தே’ – ‘அட்வான்ஸ் புக்கிங்’ அமோக வரவேற்பு…

Read Next

மைக்கேல் ஜாக்சன் ‘கெட்-அப்’பில் கானா பாலா…