விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு உலகத் தமிழர்கள் எதிர்ப்பு…

kaththi shooting spotவிஜய், சமந்தா மற்றும் பலர் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்திற்கு புலம் பெயர்ந்த உலகத் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றிய பதிவுகளை அவர்கள் கடந்த சில நாட்களாக இணையதளங்களிலும்,  சமூக வலைத்தளங்களிலும்  வெளியிட்டு வருகின்றனர்.

‘கத்தி’ படத்தை இலங்கைத் தமிழரான கருணாஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. லைகா மொபைல்ஸ் நிறுவனரும் ஒரு இலங்கைத் தமிழர்தான். ஆனால், இவர்கள் இலங்கை அதிபரான ராஜபக்சேவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.

‘இனம்’ படத்திற்கு எதிராக உலகத் தமிழர்களிடத்தில் எழுந்த எதிர்ப்பு அலையே தற்போது விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்திற்கு எதிராகவும் உருவாகியிருக்கிறது.

இலங்கைத் தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், லைகா மொபைல்ஸ் நிறுவனர் சுபாஷ்கரன் அல்லிராஜா ஆகியோர் ராஜபக்சேவின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வருவதாக ஈழத் தமிழர்கள்  குற்றம் சாட்டுகின்றனர்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவரான சுபாஷ்கரன் நிறுவனராக உள்ள லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிப்பதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இது பற்றி இதுவரை அந்த படத்தின் இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸோ அல்லது நடிகரான விஜய்யோ எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

‘துப்பாக்கி’ எடுத்து முஸ்லிம் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர்கள் இப்போது ‘கத்தி’ படத்தின் மூலம் உலக அளவில் உள்ள தமிழர்கள் எதிர்ப்பை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

‘துப்பாக்கி’யோ, ‘கத்தி’யோ எதிராளியையும் தாக்கும், நம்மையும் தாக்கும்…

Read Previous

பரதமா ? கரகமா ? – பாலா படத்தின் கதை ?

Read Next

ஆர்யாவுக்குக் கிடைத்த புது ஜோடி…?