‘தெனாலிராமன்’ படத்திற்கு சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர்.
‘தெனாலிராமன்’ பட வெளியீட்டை கடைசி நேரத்தில் சில தெலுங்கு அமைப்புகள் எதிர்ப்பதற்கு, தமிழ் உணர்வாளர்கள் தற்போது ஒன்று சேர்ந்து ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர்.
சீமான், வ. கௌதமன், ஜாக்குவார் தங்கம் ஆகியோர் வெளிப்படையாகப் பேசியும், ஆதரவுக் குரல் கொடுத்த நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான பாரதிராஜா, ‘தெனாலிராமன்’ படத்தை எதிர்ப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தை எதிர்க்க வேண்டுமென்றால், தணிக்கைத் துறையிடம்தான் முறையிட வேண்டும். அதோடு தமிழ்நாட்டை மகாராஷ்டிராவாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
அவருடைய முழுமையான அறிக்கையைப் படிக்க பின் வரும் ‘லின்க்’ஐ ‘க்ளிக்’ செய்யவும்.
Dir.Bharathirajaa Statement on Tenali Raman Issue