அஞ்சான் – கிளாமரில் அசத்தும் சமந்தா…

anjaan first look newsலிங்குசாமி இயக்கத்தில் சூர்யா – சமந்தா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் முதல் பார்வை இன்று காலையில் வெளியிடப்பட்டது.

அட….சூர்யா நடிக்கும் ஒரு படத்தின் விளம்பரமா இது அனைவரையும் ஆச்சரியப்ட வைத்துள்ளது. அந்த அளவிற்கு படத்தின் விளம்பரத்தில் அசத்தலான கிளாமர் தோற்றத்தில் இருக்கிறார் சமந்தா.

பொதுவாக, சூர்யா நடிக்கும் படம் என்றாலே குடும்பத்துடன் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக இருக்கும். பல குழந்தைகள் சூர்யாவின் தீவிர ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது- ஆனால், இந்த படத்தின் விளம்பரங்களைப் பார்க்கும் போது, இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் போலவே தெரிகிறது. குடும்பத்துடன் பார்க்க முடியுமா என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.

மேலும்,  இளைஞர்களைக் கவரும் விதத்தில் சமந்தாவின் கிளாமரான தோற்றம் கொண்ட புகைப்படங்களை விளம்பரங்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

படத்தின் கதை மும்பைபல் நடப்பதால்தானோ என்னவோ, சமந்தாவின் உடையையும் மும்பை பாணியில் படு கிளாமராக வடிவமைத்திருக்கிறார்கள்.

‘அஞ்சான்’ – எதற்கும் பயப்படாதவன்…என்று அர்த்தமாம்…

 

Read Previous

தேவையின்றி குற்றம் சுமத்துகிறார்கள் – அமலா பால்

Read Next

‘லிங்கா’ – பூஜையுடன் ஆரம்பமானது…